கிண்ணியாவில் வீதியோட்டம்! ஆரம்பமாகியுள்ள இல்ல விளையாட்டுப்போட்டி

Trincomalee Sri Lankan Peoples Eastern Province School Incident Sports
By Kiyas Shafe Feb 05, 2025 02:30 PM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியின் 97ஆவது வருடாந்த இல்ல விளையாட்டு விழாவின் ஆரம்பப் போட்டியாக வீதி ஓட்டப் போட்டி இடம் பெற்றது.

இந்த போட்டியானது கல்லூரி அதிபர் எம்.எம்.முலவ்பர் தலைமையில் நேற்று(04) காலை ஆரம்பமானது.

அத்துடன், இந்த வீதியோட்டம் சூரங்கல் சந்தியில் இருந்து ஆரம்பித்து, பாடசாலை சந்திவரை 7 கிலோ மீற்றர் தூரம் மாணவர்களால் ஓடி முடிக்கப்பட்டது.

கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

இல்ல விளையாட்டுப்போட்டி

இந்த நிலையில், மூன்று இல்லங்களிலிருந்தும் 90 வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டதுடன், இந்தப் போட்டியில் கெனரி இல்லத்தை சேர்ந்த வீரர் யூசுப் அக்மல் மற்றும் ஏ.எஸ்.எம்.அப்சான் ஆகியோர் முறையே முதலாம் மற்றும் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

கிண்ணியாவில் வீதியோட்டம்! ஆரம்பமாகியுள்ள இல்ல விளையாட்டுப்போட்டி | Marathon In Kinniya House Meet

மேலும், ஹெமலியோ இல்லத்தைச் ஏ.கே.எம்.அகீல், என்.எம்.ஹாதிம் மற்றும் எச்.எம்.ஹம்தி ஆகியோர் முறையே இரண்டாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன், இந்த வெற்றி வீரர்களுக்கு முறையே ரூபா 25000, 20000, 15000,10000, 5000 என பணப் பரிசும் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை! வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்

உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை! வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்

இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்

இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery