அம்பாறை நோக்கி பயணித்த பேருந்துடன் மோதிய மற்றொரு பேருந்து! பலர் வைத்தியசாலையில்

Ampara Accident
By Mayuri Sep 06, 2024 01:49 AM GMT

பிபில – அம்பாறை வீதியின் நாகல பகுதியில் நேற்றிரவு (05) இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது.

முதலாம் இணைப்பு

பிபில - அம்பாறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 47 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிபில – அம்பாறை வீதியில், நாகல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. 

பேருந்து மோதி விபத்து

பிபிலையில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், பின்னால் அதே திசையில் சென்ற பேருந்தும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை நோக்கி பயணித்த பேருந்துடன் மோதிய மற்றொரு பேருந்து! பலர் வைத்தியசாலையில் | Many People Injured In The Accident In Amparai

பேருந்துக்களில் தனியார் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் சிலர் பயணித்துள்ளனர் என்றும், காயமடைந்தவர்கள் பிபில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW