மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பலர் முகாம்களில் தஞ்சம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 முகாம்களில் 921 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல ஆயிரக்கணக்காண ஏக்கர் வேளாண்மை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், மாவட்டதிள்ள சில பிரதேசங்களிலிருந்து வெளிமாவட்டத்துக்குமான போக்குவரத்து மற்றும் தொடருந்து சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
இதன்படி, கடந்த 18ஆம் திகதி ஆரம்பித்த கன மழையினால் மாவட்டதிலுள்ள பெரிய குளமான உன்னிச்சை குளம் மற்றும் ஏனைய குளங்கள் யாவும் நிரம்பியதையடுத்து தேவைக்கு எற்றால் போல வான்கதவுகள் திறக்கப்பட்டதுடன் வயல் நிலங்களும் வெள்ள நீரில் மூழ்கின.
இந்த நிலையில் வெள்ளத்தினால் தாழ்நிலப்பகுதிகள் மூழ்கியதையடுத்து 3737 குடும்பங்களைச் சோர்ந்த 11971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது, மேலும் 3037 குடும்பங்கனைச் சேர்ந்த 10031 பேர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சடைந்துள்ளனர். இந்த நிலையில் 9 முகாம்களில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 921 பேர் தஞ்சமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மாவட்டதிலுள்ள பல பிரதேசத்திலுள்ள வீதி தாம்போதிகளின் மேலால் 4 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்தும், கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்குமான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதுடன் அதற்கான படகு சேவைககள் இடம்பெற்று வருகின்றன.
மேலும், இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு வழங்பகப்பட்டு வருவதுடன், தொடர்ந்தும் அதிகரித்துள்ள மழை காரணமாக இன்னும் அதிகளவான குடும்பங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறும் நிலை உருவாகும், இதனால் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |