இலங்கையில் வாழும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Ministry of Health Sri Lanka School Children
By Laksi Oct 17, 2024 07:25 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் ஐந்து வயதுக்குக் குறைந்த பராயத்தில் உள்ள 10 ஆயிரத்து 323 சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போஷாக்கு மாதத்தை முன்னிட்டு இலங்கை குடும்ப சுகாதார பணியகம் வெளியிடப்பட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அத்தோடு, 25 ஆயிரத்து 269 பேரளவான ஐந்து வயதுக்குக் குறைவான சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும்: தேர்தல் ஆணைக்குழு

வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும்: தேர்தல் ஆணைக்குழு

போஷாக்கின்மை

ஐந்து வயதுக்குக் குறைவான இலங்கைச் சிறுவர்களில் வயதுக்கேற்ற எடையைக் கொண்டிராத சிறுவர்கள் இரண்டு இலட்சத்தி 15 ஆயிரத்து 386 பேர் இனம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Many Children Are Affected By Severe Malnutrition

அதற்கு மேலதிகமாக வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு லட்சத்தி 33 ஆயிரத்து 538 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குடும்ப சுகாதார பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW