யுத்தக் காலத்திலும் பாடசாலைகளை மூட இடமளிக்கப்படவில்லை! மனுச நாணயக்கார ஆதங்கம்

Manusha Nanayakkara Sri Lankan Schools
By Mayuri Jul 19, 2024 02:37 AM GMT
Mayuri

Mayuri

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த யுத்தக் காலத்திலும் பாடசாலைகளை மூட இடமளிக்கப்படவில்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மத்துகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நடந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் பதுங்குக் குழிகளுக்குள் அமர்ந்து மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தனர்.

இலவசக் கல்விக்குப் பாரிய களங்கம்

தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலனுக்காக 10,000 பாடசாலைகள் மூடப்படுவது அவர்களது பலம் எனக் கருதுகின்றனர்.

யுத்தக் காலத்திலும் பாடசாலைகளை மூட இடமளிக்கப்படவில்லை! மனுச நாணயக்கார ஆதங்கம் | Manusha Nanayakkara Statement

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் பாடசாலைகளை மூடுவதற்கு இடமளிக்கவில்லை.

ஆசிரியர்கள் தெய்வங்கள் என்ற நிலைமையை மாற்றி, பாடசாலைக்குச் செல்லாத தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அரசியல் நலனுக்காக அதிபர்களையும் ஆசிரியர்களையும் பயன்படுத்தி இலவசக் கல்விக்குப் பாரிய களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW