தமிழ் பௌத்தத்தை அங்கீகரித்தமை தொடர்பில் ஜனாதிபதியை பாராட்டிய மனோ கணேசன்

Mano Ganeshan Ranil Wickremesinghe Vidura Wickramanayaka Government Of Sri Lanka
By Sivaa Mayuri Jun 13, 2023 03:17 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் பௌத்தத்தை பகிரங்கமாக அங்கீகரித்தமை சாதகமான செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (13.06.2023) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின் “தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி, தமிழ் பௌத்தத்தை வரலாற்று உண்மையாக அங்கீகரிப்பது 'பல முட்டுக்கட்டைகளுக்கு திறவுகோல்'ஆகும்.

தமிழ் பௌத்தத்தை அங்கீகரித்தமை தொடர்பில் ஜனாதிபதியை பாராட்டிய மனோ கணேசன் | Manoganesan Praised Ranil For Tamil Buddhism

பதவி விலகிய பணிப்பாளர்

வடக்குகிழக்கில் காணி கையகப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அண்மையில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர்; அனுர மானதுங்கவுடன் கடுமையான கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து அனுர மானதுங்க தனது பதவி விலகலை கையளித்ததாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, உறுதிப்படுத்தினார்.

எனினும் அவரின் பதவி விலகலுக்கான காரணத்தை அமைச்சர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW