சிறப்பாக இடம்பெற்ற மன்னார் மாவட்ட செயலக இப்தார் நிகழ்வு(Video)
Mannar
Sri Lankan Peoples
Iftar
By Ashik
மன்னார் மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இப்தார் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த இப்தார் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் தலைமையில் இன்று வியாழக்கிழமை (20) மாலை மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
சர்வமத தலைவர்களின் விசேட உரை
மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இடையில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் கலந்து கொண்டார்.
நிகழ்வில் இப்தார் நிகழ்வுக்கான விசேட உரை இடம் பெற்றதுடன் சர்வமத தலைவர்களின் விசேட உரைகளும் இடம்பெற்றுள்ளது.




