மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Jaffna
By Fathima Oct 13, 2023 04:10 PM GMT
Fathima

Fathima

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் (2023.10.12) அன்று மாலை 2.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திலே வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இராங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், அரசாங்க அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் 

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் | Mannar District Development Committee Meeting

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் இக்கலந்துரையாடல் உறுதுணையாக அமைந்திருந்தது.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் | Mannar District Development Committee Meeting