ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Sri Lankan Peoples National Health Service
By Fathima Jun 18, 2023 08:34 AM GMT
Fathima

Fathima

இந்த ஆண்டு புனித ஹஜ்க்கு புறப்படும் நூற்றுக்கணக்கான இலங்கை இஸ்லாமியர்களுக்கு கட்டுப்பாடற்ற வழிமுறைகள் மூலம் கட்டாய மெனிங்கோகோகல் தடுப்பூசி செலுத்தப்படுவதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

இந்தநிலையில் குளிரூட்டல் அடிப்படையிலான நிர்வாக செயற்பாட்டுக்கு உத்தரவாதம் இல்லாமல் இந்த ஊசி இறக்குமதி செய்யப்படுவதாக மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர் என்றும் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

மக்காவில் ஹஜ் செய்யும் யாத்திகர்களுக்கு மூளைக்காய்ச்சலுக்கு எதிரான மெனிங்கோகோகல் தடுப்பூசி என்பது சவுதி அதிகாரிகளால் விதிக்கப்பட்ட கட்டாயத் தேவையாகும். எனினும் மூளைக்காய்ச்சல் இலங்கையில் அரிதான நோயாகும்.

ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Mandatory Meningococcal Vaccination

தடுப்பூசி

இஸ்லாமிய சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஹஜ் பிரிவை தொடர்பு கொண்ட போது, புனித யாத்திரைக்கு புறப்படும் இலங்கையர்கள் சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும் எம்ஆர்ஐ என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தடுப்பூசிப் பிரிவு, மெனிங்கோகோகல் தடுப்பூசி வழங்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.

ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Mandatory Meningococcal Vaccination

சில ஆண்டுகளாக இலங்கைக்கு இந்த ஊசி பெறப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

இந்தநிலையில், யாத்திரிகர்களுக்கு தனியார் துறை மருத்துவர்களால் இந்த தடுப்பூசி போடப்படுகிறது என்று ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

விசாரணை 

இதற்கிடையில் தற்போது புனித யாத்திரையாக மக்காவிற்கு சென்றுள்ள, இஸ்லாமிய சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெய்னுலாப்தீன் முஹம்மத் பைசல் தமக்கு எம்ஆர்ஐ அல்லது மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி கிடைக்கவில்லை என்பது தெரியாது என்று குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.

ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Mandatory Meningococcal Vaccination

அத்துடன் தாம் அங்கம் வகிக்கும் ஹஜ் குழுவில் உள்ள சேவை ஒரு மருத்துவர் மூலம் தனக்கும் தடுப்பூசி கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.

எனவே இது தொடர்பில் விசாரணை செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார். இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக 3500 இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.