பேருவளையில் பெண்ணின் தாக்குதலால் மரணமடைந்த நபர்
பேருவளை – வலத்தர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் ஆண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தாக்குதலுக்குள்ளான நபர் தொடர்பில் பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணை
இதன்போது குறித்த நபர் பேருவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, முறைகேடான மனைவியுடன் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்ததால், அந்த பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
அத்தோடு, உயிரிழந்தவர் பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் என கண்டறியப்பட்டுள்ளதுடன், அவரை கொலை செய்த பெண் 42 வயதுடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை, குறித்த பெண் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |