வவுனியா நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

Sri Lanka Police Vavuniya Sri Lankan Peoples Crime
By Fathima Nov 28, 2023 10:37 AM GMT
Fathima

Fathima

வெளிநாட்டுக்கு அனுப்புதல் தொடர்பான கொடுங்கல் வாங்கல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா நீதிமன்றத்தால் இன்று (28.11.2023) பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில்இ நெஞ்சுவலி என கூறி நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்

எனினும், அவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

விளக்கமறியல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வெளிநாடு செல்வதற்கு சிலர் குறித்த நபர் ஊடாக பிறிதொருவருக்கு பணம் கொடுத்துள்ளனர்.

வவுனியா நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு | Man Released On Bail By Vavuniya Court Dies

பணம் பெற்றுக் கொண்டவர் பணம் வழங்கியவர்களை வெளிநாடு அனுப்பாமையால், குறித்த நபருக்கு எதிராக பணம் கொடுத்தவர்கள் வவுனியா பொலிஸில் பணம் கொடுத்தமை தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் முற்படுத்தி விளக்கமறியில் வைக்கப்பட்டு, நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்தவராவார்.