இலங்கையில் 103 வயது வரை தெளிவான சிந்தனையுடன் வாழ்ந்த வயோதிபர்

Kandy Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Mar 16, 2025 09:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

100 வருடங்களுக்கு மேல், கண்டி மாவட்ட, யஹலதென்ன பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அல்ஹாஜ் அப்பாஸ்  திடகாத்திரமாக உயிர் வாழ்ந்தவராக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் கடந்த வியாழக்கிழமை(13) காலமாகியுள்ளார்.

அன்றாடம் தனது சுய வேலைகளை தாமே செய்து கொண்டும் வாழ்ந்த இவர் தமது சமய விடயங்களுக்கு முன் உரிமை கொடுத்து, அதனை முறையாகப் பின்பற்றி வாழ்ந்த ஒருவராவார்.

பட்டலந்த வதை முகாமில் நடந்ததை முழுமையாக பகிரங்கப்படுத்திய ரணில்

பட்டலந்த வதை முகாமில் நடந்ததை முழுமையாக பகிரங்கப்படுத்திய ரணில்

சிந்திப்பதை நிறுத்திய மனிதர்

மரணிப்பதற்கு சில நாட்கள் வரை அதாவது முதல் எட்டு நோன்புகள் வரை இவர் நோன்பு நோற்றதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குறிப்பிடத்தக்க பாரிய வியாதிகள் எதுவும் இன்றி தனது புதல்வியின் உதவியுடன் வாழ்ந்து வந்த இவர் இறுதி நேரத்தில் மட்டுமே பலவீனமடைந்து காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் 103 வயது வரை தெளிவான சிந்தனையுடன் வாழ்ந்த வயோதிபர் | Man Lives To 103Y Age With Clear Thinking At Sl

இவர் இப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு அமைதியான சுபாவம் கொண்ட வர்த்தகர் ஆவார். இவர் நான்கு புதல்விகளதும், நான்கு புதல்வர்களதும் தந்தையாவார், அவர்களில் சிலர் மரணித்துள்ளனர். சிலர் வாழ்ந்துகொண்டுள்ளனர். இவரது ஜனாஸா வியாழக்கிழமை (13) யஹலதென்ன ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாவத்தகம பிரதேச செயலகத்தில் நோன்பு திறக்கும் விசேட இப்தார்

மாவத்தகம பிரதேச செயலகத்தில் நோன்பு திறக்கும் விசேட இப்தார்

பதவி விலகிய சாலி நளீம் எம்.பி : கட்சி எடுத்துள்ள தீர்மானம்

பதவி விலகிய சாலி நளீம் எம்.பி : கட்சி எடுத்துள்ள தீர்மானம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW