சர்வதேச போட்டியில் புர்கா வேடமிட்டு பெண்களோடு செஸ் விளையாடிய ஆண்

Kenya
By Dhayani Apr 15, 2023 11:09 PM GMT

கென்யாவில் சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் பெண்களுடன் விளையாட ஆண் ஒருவர் புர்கா அணிந்து விளையாடியுள்ளார். 

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற இந்த போட்டியில் 22 நாடுகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

குறித்த நபர் உடல் முழுவதும் மறைக்கும்படி புர்கா அணிந்து கொண்டு அடையாளம் தெரியாமல் பெண்களை போல் விளையாடி வெற்றி பெற்றுள்ளார்.

சர்வதேச போட்டியில் புர்கா வேடமிட்டு பெண்களோடு செஸ் விளையாடிய ஆண் | Man Dressed In A Burqa And Playing With Girls

இதன்போது சந்தேகமடைந்த விளையாட்டுக்குழு குறித்த இளைஞரை தனி அறைக்கு அழைத்து சென்று அடையாள அட்டையை வினவிய போது அவர் பல்கலைக்கழக மாணவர் என்றும் நிதி நெருக்கடியால் மோசடியில் ஈடுபட்டதாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் அவர் பெற்ற புள்ளிகள் அனைத்தும் எதிர் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.