வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி (Photos)
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து நேற்று (29.05.2023) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தியாகராசா சஞ்சீவன் என்ற 36 வயதுடைய தருமபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து தர்மபுரம் நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிளும், புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.