உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Laksi
குருணாகல் - பலல்ல பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிக்கவெரட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் குருணாகல் - நிக்கவெரட்டிய பகுதியில் வசிக்கும் 63 வயதுடைய நபரென தெரியவருகிறது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிக்கவெரட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |