புத்தளத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வசமாக சிக்கிய நபர்

Puttalam
By Mayuri Jul 22, 2024 12:07 PM GMT

புத்தளம், கற்பிட்டி, குடாவ கடற்கரை பகுதியில் படகு மூலம் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேகநபரொருவர் கைதாகியுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று (21) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி பகுதியில் வசிக்கும் நபர் கைது

சம்பவம் தொடர்பில் புத்தளம், கற்பிட்டி பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 189 கிலோகிராம் பீடி இலைகள் (6 பொதிகள்) மற்றும் படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

GalleryGallery