ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

Sri Lanka
By Nafeel May 07, 2023 01:54 AM GMT
Nafeel

Nafeel

 வத்தளை ஒலியமுல்ல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை ஒலியமுல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, அவரது பையில் 84 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 600 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேகநபர் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.