இஸ்ரேலியர்களுக்கு தடை விதித்த முஸ்லிம் நாடு..!
Israel
Passport
Maldives
World
By Rakshana MA
முஸ்லிம் நாடான மாலைதீவில் (Maldives) இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மாலைதீவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பு
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பங்காளதேஷ், பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக மாலைதீவும் தங்கள் நாட்டிற்குள் இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நுழைய தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |