இரு நாடுகளின் 18 ஆண்டு கால பேச்சுவார்த்தைக்கு தீர்வு

Malaysia Indonesia
By Fathima Jun 09, 2023 06:51 PM GMT
Fathima

Fathima

18 ஆண்டு கால பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, மலேசியா-இந்தோனேசியா கடல்வழி எல்லை பிரச்சினைக்கு ஒரு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

மலாக்கா ஜலசந்தி மற்றும் சுலாவேசி கடற்பகுதிகளில் உள்ள எல்லை நிர்ணயம் சம்பந்தமான இரு ஒப்பந்தங்கள், மலேசியா பிரதமர் அன்வர் இப்ராகிம் மற்றும் இந்தோனேசியா ஜனாதிபதி ஜோகோ விடோடோ ஆகியோர் முன்னிலையில் நேற்று(08.06.2023) கையெழுத்திடப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் பேச்சுவார்த்தை

இரு நாடுகளின் 18 ஆண்டு கால பேச்சுவார்த்தைக்கு தீர்வு | Malaysia Indonesia Problem Solved

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ தன் மனைவி மற்றும் கேபினட் அமைச்சர்களுடன் 2 நாள் பயணமாக மலேசியா சென்றுள்ளார்.

இந்நிலையில், பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த கடல்வழி எல்லை பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரவும், பாமாயில் வர்த்தகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவூட்டும் வகையில் ஒன்றுபட்டு போராட மலேசியாவும், இந்தோனேசியாவும் ஒப்பந்தம் செய்துள்ளது.