மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் உட்பட 88 வெளிநாட்டவர்கள்

Sri Lanka Malaysia World
By Harrish Jul 11, 2024 10:42 PM GMT
Harrish

Harrish

Courtesy: Sivaa Mayuri

மலேசியாவின் குடிவரவுத் திணைக்களம் ஜூலை 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் ஈப்போ நகர மையத்திலும் அதைச் சுற்றியும் சட்டவிரோத விபச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படும், இலங்கையர் ஒருவர் உட்பட 88 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் அவர்கள், குடிவரவு மற்றும் குடிவரவு விதிமுறைகளின்  கீழ் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பேராக் குடிவரவுத் துறை இயக்குநர் மேர் ஹெஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக் கூறியுள்ளார்.

சட்டவிரோத விபச்சார நடவடிக்கை

இதன்போது, 21 முதல் 46 வயதுக்குட்பட்ட 78 பெண்கள் மற்றும் 10 ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தாய்லாந்தின் 64 பேரும், வியட்நாமின்  13 பேரும், நேபாளத்தின் 4 பேரும் இந்தியாவின் 3 பேரும் பங்களாதேஷின் 3 பேரும் இலங்கை ஒருவரும் அடங்குகின்றனர்.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் உட்பட 88 வெளிநாட்டவர்கள் | Malaysia Arrest 88 Foreigners Including Sri Lankan

இந்நிலையில், குற்றவாளிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று மலேசிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW