இலங்கையின் நிவாரண பணிகளில் இணைந்து கொண்ட இஸ்ரேல்!
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரண உதவிகளை இஸ்ரேல் வழங்கியுள்ளது.
இந்த தருணத்தில் இலங்கையில் நடந்து வரும் தேசிய நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இஸ்ரேல் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது.
நீண்டகால நட்பு
நிவாரணப் பொருட்களில் மடிப்பு படுக்கைகள், முதலுதவி பெட்டிகள், அறுவை சிகிச்சை கையுறைகள், சுகாதாரப் பெட்டிகள், நுளம்பு வலைகள், மின் வங்கிகள், மழைக்கோட்டுகள், மெத்தைகள், தண்ணீர் தொட்டிகள், குழந்தை பாத்திரப் பொதிகள், சமையலறைப் பெட்டிகள், நீரில் மூழ்கக்கூடிய நீர் பம்புகள் மற்றும் கண்ணாடிகள் ஆகியவை அடங்கும் என்றும் இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த உதவி இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பை பிரதிபலிப்பதாக அந்த நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த கடினமான நேரத்தில் இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க இஸ்ரேல் தயாராக உள்ளதாகவும் அந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது.
In solidarity with Govt & people of Sri Lanka after Cyclone Ditwah, Israel along with @MASHAVisrael is sending humanitarian aid, including beds, hygiene kits, medical supplies, etc, to support thousands of affected people.
— Israel in India (@IsraelinIndia) December 8, 2025
Our diplomat @BakstHadas is in Sri Lanka to oversee the… pic.twitter.com/31wOIFJiMA


