அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்தமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பட்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டின் நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்படுவதாகவும், எரிவாயு, எரிபொருள் என்பன காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சாதகமான ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டால் அதன் மூலம் மக்களுக்கு மேலும் நலன்களை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்க அமைச்சர்களை எவரும் இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.