வரவு செலவுத்திட்டத்தில் நல்லது கெட்டது இரண்டும் உண்டு – மகிந்த

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe
By Kamal Nov 15, 2023 11:09 AM GMT
Kamal

Kamal

 வரவு செலவுத் திட்டத்தில் நல்லது கெட்டது இரண்டும் உண்டு என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நல்ல யோசனைகளுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட யோசனைகளை சரியான முறையில்  நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் அதற்கான நிதியை திரட்டிக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தில் நல்லது கெட்டது இரண்டும் உண்டு – மகிந்த | Mahinda Rajapakshe Rannil

எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் நல்ல யோசனைகள் அனைத்துக்கும் ஆதரவளிக்கப்படும் என மகிந்த ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.