எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மகிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ள நிலையில் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பாரம்பரிய அரசியல்
அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகின்றது.
பாரம்பரிய அரசியல் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களும் இந்த முடிவிற்கு காரணமாகியுள்ளதென தெரியவந்துள்ளது.
முப்பது ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், 7.6% என்ற அளவில் பொருளாதாரத்தை வளர்க்கவும், ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தேசிய உற்பத்தியை 84 பில்லியன் டொலர்களாக உயர்த்தவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் முடிந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.