இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்த எம்.என்.எம்.நஸ்ரக்

Puttalam Risad Badhiutheen Sri Lanka
By Laksi Aug 16, 2024 03:46 PM GMT

புத்தளம் முன்னாள் நகரபிதாவும் முன்னாள் பிரதி அமைச்சருமான மர்ஹூம் கே.ஏ.பாயிஸின் மருமகன் எம்.என்.எம்.நஸ்ரக் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வானது அந்த கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நேற்றைய தினம் (15) இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், புத்தளம் மாவட்ட மக்களின் நன்மை கருதியும் தமது ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு அமையவுமே இந்த முடிவை தாம் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ள அலி ஸாஹிர் மௌலானா..!

ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ள அலி ஸாஹிர் மௌலானா..!

சமூகத்தின் பிரச்சனை

அத்தோடு, சிறுபான்மை மக்களில் கரிசனைகொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உழைத்து வருவதை தாம் உணர்ந்துள்ளதாகவும், எதிர்காலத்தில், கட்சியையும் தலைமையையும் பலப்படுத்த தன்னாலான முழு முயற்சியையும் மேற்கொள்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்த எம்.என்.எம்.நஸ்ரக் | M N M Nasraq Join For All Ceylon Peoples Congress

மேலும், தற்போதைய கால கட்டத்தில், இவ்வாறான கட்சி ஒன்றே நமது சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவுமெனவும் எம்.என்.எம்.நஸ்ரக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு!

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு..! மைத்திரி வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு..! மைத்திரி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery