இலங்கை மின்சார ஊழியர் சங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Kanchana Wijesekera
By Mayuri Jan 02, 2024 08:02 AM GMT
Mayuri

Mayuri

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03.01.2024) முதல் மூன்று நாள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு மின்துறை அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக அதன் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மூன்று நாட்களுக்கு மாபெரும் போராட்டம் நடத்த ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளோம்.

நீங்கள் புறக்கணித்தால் கஞ்சனவுக்கு பகிரங்க சவால் விடுகிறோம். முடிந்தால் இதை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வாருங்கள். அன்றைய தினம் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அனைவரையும் வரவழைப்போம் என்றார்.