எல்.பி.எல். கிரிக்கெட் போட்டி சட்டவிரோதமானது: குற்றம் சுமத்தும் விளையாட்டுத்துறை அமைச்சர்
இலங்கையில் ஆரம்பமாகியுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டிகள் சட்டவிரோதமானது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எல்பிஎல் தொடரில் பங்குபற்றும் வீரர்கள், போட்டிக்காக பெறும் சம்பளத்தில் இருந்து வரி செலுத்துவது அவசியம் என்ற போதிலும், அவர்கள், கிரிக்கட் தொடரில்; இருந்து பெறும் வேதனத்துக்காக வரி செலுத்துவதில்லை என அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பல ஆண்டுகளாக எல்பிஎல் போட்டிகளில், சட்டம் பின்பற்றவில்லை இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எல்.பி.எல் ஆரம்விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், போட்டி சட்டவிரோதமானது என்பதால் அதை புறக்கணிக்க முடிவு செய்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது சிறிலங்கா கிரிக்கெட்டின் மற்றுமொரு கரும்புள்ளி எனவும் அமைச்சர்
தெரிவித்தார்.
லங்கா பிரீமியர் லீக் 2023 கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சு. பிரேமதாச
மைதானத்தில் ஆரம்பமானது.