எல்.பி.எல் தொடரில் பிழையாக இசைக்கப்பட்ட தேசிய கீதம்: வெடிக்கும் சர்ச்சை

Cricket Sri Lanka Cricket Sri Lanka
By Fathima Jul 31, 2023 11:05 AM GMT
Fathima

Fathima

லங்கா ப்றீமியர் லீக் தொடரின் ஆரம்ப விழாவில் இலங்கையின் தேசிய கீதத்தின் பொருள் மாறும் வகையில், புதிய பாணியில், இசைக்கப்பட்டமை தொடர்பில், தற்போது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

1978 ஆண்டு அரசியலமைப்பின் படி, தேசிய கீதத்தின் வரிகள் மற்றும் அதன் பின்னணி இசையினை மாற்றி இசைக்கப்பட்டமையானது, நாட்டின் கீர்த்தியையும், அரசியலமைப்பையும் மீறும் செயற்பாடாகும் என சட்ட அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

எல்.பி.எல் தொடரில் பிழையாக இசைக்கப்பட்ட தேசிய கீதம்: வெடிக்கும் சர்ச்சை | Lpl 2023 National Anthem Issue

பிழையான உச்சரிப்பு

நான்காவது லங்கா ப்றீமியர் லீக் தொடரின் ஆரம்ப விழா கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில், நேற்று (30.07.2023) ஆரம்பமானது.

அதில் தேசிய கீதத்தை இசைப்பதற்காக வாய்ப்பு பாடகி உமார சிங்ஹசங்வுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதன்போது, அவர் பிழையான உச்சரிப்பில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் இசைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.