ஜூலை முதல் நேரடியாக வங்கிக்கு வரும் பணம்! மக்களுக்கு நற்செய்தி

Shehan Semasinghe Money
By Mayuri Jun 13, 2023 10:39 AM GMT
Mayuri

Mayuri

நிவாரணப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் திட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல்

மேலும் தெரிவிக்கையில், சுமார் 95% பயனாளிகளின் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் பொறுப்பு வழங்கப்பட்ட குழு அதனை உறுதி செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் இந்த நலத்திட்ட உதவி கொடுப்பனவுகள் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் ஜனாதிபதி அலுவலகம் முன்னதாக அறிவித்திருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், நலன்புரி பயனாளிகளின் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வு காண இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டிருந்தது.