அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் குறித்து வெளியான புதிய தகவல்
Sri Lanka
Sri Lanka Cabinet
Money
By Mayuri
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வழங்கப்படும் ஒரு பிரிவினருக்கு உதவித்தொகை கிடைக்கும் காலம் நீடிக்கப்படவுள்ளது.
இந்த திருத்தத்தை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, நிலையற்றவர்கள் என்ற சமூக பிரிவினருக்கான உதவித்தொகை கிடைக்கின்ற காலத்தை எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை அதிகரிப்பு
அத்துடன், இயலாமைக்கு உட்பட்டவர்கள் மற்றும் சிறுநீரக சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகை 7,500 ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
அதேநேரம், முதியவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகையை 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.