உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிப்பு
இலங்கையில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மே 06 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (20) நண்பகல் 12.00 மணிக்கு நிறைவடைந்தது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
இதன்படி, 336 உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி மார்ச் 17 ஆம் திகதி தொடங்கியது, வேட்புமனு தாக்கல் காலம் முடிந்த பிறகு தேர்தல் திகதி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வைப்புத்தொகை செலுத்துவதற்கான காலக்கெடு நேற்று (19) முடிவடைந்தது.
இதற்கு முன்னர் தேர்தல் தொடர்பான முக்கிய காலக்கெடுவை நீட்டிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது, அத்துடன், வேட்புமனு தாக்கல் செயல்முறை முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு திகதி நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |