உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka
Election
By Laksi
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையகம்
உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, இலங்கை மக்கள் ஜனநாயக உரிமையான வாக்களிப்பை உறுதிப்படுத்தும் செயற்பாட்டை மிக விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த விடயத்தில் அரசியலமைப்பில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தவுள்ளதாகவும் தேர்தல் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |