உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Election
Sri Lanka Presidential Election 2024
By Laksi
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே உள்ளூராட்சி சபைத்தேர்தல் நடாத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய, நீதிமன்றின் இந்த தீர்ப்பு குறித்து அடுத்த வாரம் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல்
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலையும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியம் இல்லை என ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேர்தல் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |