உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Sri Lankan Peoples Local government Election Sri lanka Post
By Laksi Mar 30, 2025 12:59 PM GMT
Laksi

Laksi

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஏப்ரல் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20 மற்றும் 27 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிப்பதற்கான விசேட நாட்களாகக் கருதப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த நடவடிக்கைகள் ஏப்ரல் 29ஆம் திகதி வரை தொடரும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தபால் வாக்குச் சீட்டுகள்

அதன்படி, ஏப்ரல் 16ஆம் திகதி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து வெளியான தகவல் | Local Election In Sri Lanka

இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் ஏப்ரல் 7 ஆம் திகதி தபால் நிலையத்திற்கு வழங்கப்படவுள்ளதுடன் இந்த நடவடிக்கைகள் விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சருக்கு சி.ஐ.டி அழைப்பு

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சருக்கு சி.ஐ.டி அழைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW