சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!

Sri Lanka Litro Gas LAUGFS Gas PLC Litro Gas Price Laugfs Gas Price
By Fathima Jan 02, 2026 06:33 AM GMT
Fathima

Fathima

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் இந்த மாதத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவலில், உலகச் சந்தை நிலவரங்களின் படி எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை

இருந்த போதிலும், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்த நேரத்தில் விலைத் திருத்தத்தை மேற்கொள்ளப் போவதில்லை என அவர் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்! | Litro Gas Price Today In Sri Lanka

இதேவேளை லிட்ரோ எரிவாயுவின் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு 3690 ரூபாவாகவும், 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு 1482 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு 694 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை

இதேவேளை நேற்று (01.01.2026) முதல் நடைமுறைக்கு வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்! | Litro Gas Price Today In Sri Lanka

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4250 ரூபாவாகும்.

அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 65 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 1710 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.