எரிவாயு விலை தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட தகவல்

Litro Gas Litro Gas Price Economy of Sri Lanka
By Madheeha_Naz Nov 06, 2023 03:23 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

அடுத்தாண்டின் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குளிர் காலநிலை காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கலாம் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் எரிவாயுவின் விலையை  குறைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு விலை

புதிய திருத்தத்திற்கமைய, லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டது.

எரிவாயு விலை தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட தகவல் | Litro Gas Price Sri Lanka 2023

அதற்கமைய,12 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,565 ரூபாவாகும்.

புதிய விலையின் கீழ், 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,431 ரூபாவாகவும், 02 கிலோகிராம் சிலிண்டரின் விலை 668 ரூபாவாகவும் இருக்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக தேநீர், பால் தேநீர் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.