லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
Litro Gas
Litro Gas Price
Laugfs Gas Price
By Dharu
செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.3,690 ஆகவும், 5 கிலோகிராம் 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையும் மாறாமல் ரூ.694 ஆக உள்ளதுஎன்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
நடைமுறையில் உள்ள எரிவாயு விலை நிர்ணய பொறிமுறையின் கீழ் நிறுவனத்தின் வழக்கமான மாதாந்திர விலை மதிப்பாய்வைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.