லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு
Sri Lanka
Litro Gas
Litro Gas Price
By Madheeha_Naz
லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலைகளை திருத்தியுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை
எனவே சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,186 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,281 ரூபாவாகும்.
2.3 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 598 ரூபாவாகும்.
இன்று (04.06.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.