லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டது: சற்றுமுன் வெளியான அறிவிப்பு
இன்று (02) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகிறது.
லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படுகிறது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 40 ரூபாவினால் குறைக்கப்படுகிறது.
இதன்படி, 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 1,482 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன் 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 18 ரூபாயினால் குறைக்கப்படுகிறது.
இதற்கமைய, 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 694 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
முதலாம் இணைப்பு
எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் உள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இறுதியாக மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தம்
மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்தின்படி, ஜூன் 4ஆம் திகதி இறுதியாக எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது.
இதன்போது,12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அதன் தற்போதைய விலை 3,790 ரூபாவாக உள்ளது.
5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |