லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும், 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
மாதாந்த லிட்ரோ எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் அந்த நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி , டிசம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் இன்று(02.12.2024) அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாத நிலையில், இறுதியாக ஒக்டோபரில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.
எரிவாயு சிலிண்டரின் விலை
இதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை குறித்த விலையே நடைமுறையில் உள்ளது.
இதேவேளை, லாஃப் நிறுவனமும் இன்று(02) விலை திருத்தத்தை அறிவிக்கவுள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |