லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு - வெளியான அறிவிப்பு
Litro Gas
Litro Gas Price
By Fathima
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நாளை (04.06.2023) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 300 வரையில் இந்த விலை குறைப்பை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும் விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம் விடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.