அதிகரிக்கப்படவுள்ள சமையல் எரிவாயுவின் விலை

Litro Gas Litro Gas Price
By Kamal Sep 04, 2023 03:42 AM GMT
Kamal

Kamal

சமையல் எரிவாயுவின் விலை இன்றைய தினம் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் விநியோகம் செய்யும் எரிவாயு வகைகளுக்கு இவ்வாறு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

உலக சந்தையில் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ற வகையில்  இலங்கையிலும் விலை அதிகரிக்கப்பட உள்ளது.

குறிப்பிடத்தக்க அளவு விலை அதிகரிப்பு இன்று பதிவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செயதி வெளியிட்டுள்ளது.