ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடையோர் சஜித் ஆட்சியில் கைதாவர் : சாணக்கியன் திட்டவட்டம்
ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்யப்படுவார்கள் இது எனது அரசாட்சியில் நிறைவேற்றப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (15 ) நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக்கட்சியின் மத்திய குழு
இதன் போது கருத்து தெரிவித்த இரா சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கான தீர்வினையும் , அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வினையும் , ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும் , அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டப்படுவதோடு , பிள்ளையான் போன்ற கொலையாளிகளையும் கைது செய்ய வேண்டும்
வாகரை இல்மனைற் அகழ்வுடன் தொடர்புடைய காணி திருடர்கள் , சட்ட விரோத மண் கடத்தல்கார கும்பல் உட்பட பல கள்வர்கள் மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதோடு இவ்வாறான விசமிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.
மேலும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூடி ஏகமனதாக தீர்மானித்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு
இவ்வாறான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உட்பட அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் தமிழர்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வையும் இவ்வாறான கொலையாளிகள் கள்வர்கள் மற்றும் சாணக்கியன் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தமது அரசாட்சியில் இதற்கான நீதி நிலைநாட்டப்படும் என்பதனையும் ஐக்கிய மக்கள் கட்சியினுடைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
அதனையும் தாண்டி குறிப்பாக நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் தான் அமைச்சராக கடமையை ஏற்று இருந்த காலப்பகுதியில் முடிக்கப்படாமல் இருக்கின்ற வீட்டுதிட்ட வேலைகள் அனைத்தும் ஒரு மாத கால பகுதிக்குள் நிறைவுறுத்தப்படுவதாகவும் சஜித் குறிப்பிட்டார்.