அக்கறைப்பற்று விளையாட்டு மைதானத்திற்கு மின்னொளி
அக்கரைப்பற்று விளையாட்டு மைதானத்திற்கு மின்னொளியூட்டும் வேலைத்திட்டம் அக்கரைப்பற்று மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகிறது.
இரவு வேளையில் இருள் சூழ்ந்து காணப்படும் இந்த மைதானத்தில் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக விளையாட்டுக்கழகங்களும் பொதுமக்களும் மாநகர ஆணையாளர் என்.எம்.நௌபீஸின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததுடன் இம் மைதானத்திற்கு மின்விளக்குகளை பொருத்தி, ஒளியூட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
முன்னேற்ற திட்டங்கள்
இதையடுத்து ஆணையாளர் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக மாநகர சபையின் சொந்த நிதியின் மூலம் மின்னொளியூட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் அங்கு புதிதாக மின்கம்பங்கள் நாட்டப்பட்டு, பிரகாச மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |