எம்.பி ஹரீஸினால் மருதமுனை மைதானத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிரந்தர மின்னொளி!

H M M Harees Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples Kalmunai
By Rakshana MA Jan 22, 2025 12:45 PM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை பிரதேசத்தில் நிரந்தரமான மின்னொளி விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸினால்(HMM.Harees) கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்திற்கு நிரந்தரமாக மின்னொளி பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 இந்த நடவடிக்கை ஹரீஸின் D-100 திட்டத்தினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 16 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தினை கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை மாநகர சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

மீட்புப்பணியிலும் தொழுகையை நிலை நிறுத்திய பணியாளர்! கிழக்கில் நடந்த சம்பவம்

மீட்புப்பணியிலும் தொழுகையை நிலை நிறுத்திய பணியாளர்! கிழக்கில் நடந்த சம்பவம்

மக்கள் பாவனைக்காக...

இந்த வேலைத்திட்டத்தின் பூர்வாங்க வேலைகள் இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையாக நிறைவடைந்து மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி ஹரீஸினால் மருதமுனை மைதானத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிரந்தர மின்னொளி! | Light Given To Maruthamunai Stadium By Mp Haris

மேலும், இந்த செயற்திட்டத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உதைப்பந்தாட்ட வீரர்கள் மற்றும் மென்பந்து கிரிக்கெட் வீரர்கள் அதிகம் பயனடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மியன்மார் அகதிகள் விவகாரம்: ஐக்கிய மக்கள் முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம்

மியன்மார் அகதிகள் விவகாரம்: ஐக்கிய மக்கள் முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம்

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery