இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உயிரோட்டத்தைப் பறித்தார்கள்: எம். எஸ். சுபைர் (Photos)

Government Of Sri Lanka Easter Attack Sri Lanka
By Fathima Sep 11, 2023 01:04 AM GMT
Fathima

Fathima

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உயிரோட்டத்தைப் பறித்தார்கள் என கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்பதையொட்டி சுமார் 220 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அஸிஷா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் ஏறாவூர் முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாசலில் (10.09.2023) அன்று இடம்பெற்ற நிகழ்வில் பொருளாதார நெருக்கடியினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களில் சன்மார்க்க் கடமை புரியும் இமாம்கள், முஅத்தின்கள், ஆலிம்கள் ஆகியோருக்கு உலருணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உயிரோட்டத்தைப் பறித்தார்கள்: எம். எஸ். சுபைர் (Photos) | Life Of The Muslim Community In Sri Lanka

அரிசி கோதுமை மாவு அடங்கிய சுமார் ஒன்பது இலட்ச ரூபாய் பெறுமதியான உலருணவுகள் தலா 5 ரூபாய் பெறுமதியான பொதிகளாக பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுபைர்,

இந்த நாட்டிலே இனங்களுக்கிடையில் பாரழிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் இன்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது.

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உயிரோட்டத்தைப் பறித்தார்கள்: எம். எஸ். சுபைர் (Photos) | Life Of The Muslim Community In Sri Lanka

தலை நிமிர்ந்து வாழ்ந்த சமூகம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் தலைக்குனிவுடன் வாழ்ந்து வருகின்றது. தீவிரவாதிகளாக, அடிப்படைவாதிகளாக, பயங்கரவாதிகளாக, முஸ்லிம்கள் பார்க்கப்பட்டு முஸ்லிம்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டார்கள்.

நெருங்கியிருந்தவர்களும் ஓரமாகி தூரமாகிச் சென்றார்கள். ஆன்மீகவாதிகளையும் அரசியல்வாதிகளையும் அஹிம்சாவாதிகளையும் அப்பாவிகளையும் கூண்டில் அடைத்தார்கள்.

விசாரணை செய்தார்கள். விளக்கம் கேட்டார்கள். இவர்கள் எங்களிடம் இரங்காததால் இறைவனிடம் நீதி கேட்டோம்.

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உயிரோட்டத்தைப் பறித்தார்கள்: எம். எஸ். சுபைர் (Photos) | Life Of The Muslim Community In Sri Lanka

இந்த வேளையில் எம்மீது சுமத்தப்பட்டுள்ள அநாவசிய அவமானக் குற்றச்சாட்டுக்களைக் களைந்தெறிந்து இந்த சமூகத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

மீண்டும் இந்த நாட்டு மக்களுக்கு நாம் தேசத்தின் நேச பக்தர்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வுகளில் கொடை வள்ளலும் மார்க்க அறிஞரும் அரசியல்வாதியுமான காலஞ்சென்ற ஹஸன் மௌலவியின் ஞாபகார்த்த கருத்துரையும் இடம்பெற்றன.

கொடை வள்ளல் ஹஸன் மௌலவின் புதல்வன் அஸிஷா பௌண்டேஷனின் பணிப்பாளர் சாதிக் ஹஸன், சமூக செயற்பாட்டாளர் றிஸான் ஹாஜியார், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிநேசாதகர் சரூக், உட்பட ஜம்மிய்யத்துல் உலமா சபைக் கிளை உறுப்பினர்கள் மார்க்க அறிஞர்கள் பள்ளிவாசல்களின் கதீப்மார் பயனாளிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery