ஹஜ்ஜூக்கு விமானத்தில் செல்லவிருந்த இளைஞருக்கு காத்திருந்த அதிசயம்
அமர் அல் மக்தி மன்சூர் அல் கத்தாஃபி எனும் இளம் லிபியர் ஹஜ்ஜிற்காக பயணிக்கும்போது, விமான நிலையத்தில் அவரது பெயரில் ஒரு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் பாதுகாப்பு அதிகாரிகளால், “நாங்கள் இதைத் தீர்க்க முயலுகிறோம், ஆனால் நீங்கள் கொஞ்சம் எங்களுடன் காத்திருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளனர்.
இதேவேளை, மற்ற யாத்ரீகர்கள் எல்லோரும் சோதனைகளை முடித்து, விமானத்தில் ஏறி, கதவும் மூடியது.
பறக்க மறுத்த விமானம்
சில நிமிடங்களில் அமரின் பிரச்சனை தீர்ந்துவிட்டது, ஆனால் விமானிகள் கதவைத் திறக்க மறுத்து, விமானம் புறப்பட்டுவிட்டது.
இந்நிலையில், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள், ஆனால் அமர் விட்டுவைக்கவில்லை.
“இன்ஷா அல்லாஹ், நான் ஹஜ்ஜுக்கு நிச்சயமாகச் செல்வேன்” என்று நம்பிக்கையாக நின்றார். அச்சமயம் விமானத்தில் ஒரு பழுது ஏற்பட்டதாக தகவல் வந்தது, விமானமும் திரும்பி வந்துள்ளது.
இருப்பினும் விமானம் சரி செய்த பிறகும், விமானிகள் கதவைத் திறக்க மறுத்துள்ளனர்.
இந்நிலையில் மறுபடியும் அதிகாரிகளால் அமருக்கு ஆறுதல் கொடுக்கப்ட்டுள்ளது. ஆனாலும் அமர் உறுதியாக, “இன் ஷா அல்லாஹ், நிச்சயமாகச் நான் ஹஜ்ஜுக்கு செல்வேன்” என்று உறுதியாக இருந்துள்ளார்.
விமானம் மீண்டும் நகரத் தொடங்கியுள்ளது. சில நிமிடங்களில் மற்றொரு பழுதால் மீண்டும் தரைக்கு திரும்பியுள்ளது.
அந்தக் கணத்தில், “நான் அமர் இல்லாமல் பறக்க மாட்டேன்” என்று விமானி கூறியதை தொடர்ந்து அமர் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறுதியில், எந்த வித கோளாறும் இன்றி அனைவரும் ஹஜ்ஜூக்கு சென்ற நெகிழ்ச்சி சம்பவம் சர்வதேச ரீதியில் பேசு பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |