அதிகளவிலான பெண் பிரதிநிதித்துவத்தை பெற்று சாதனைப் படைப்போம்: பிரதமர் ஹரிணி

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Harini Amarasuriya General Election 2024
By Laksi Oct 11, 2024 10:18 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பிரதிநிதித்துவத்தை பெற்று இந்த முறை நாடாளுமன்றத்தில் வரலாற்று சாதனைப் படைப்போம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பொதுத் தேர்தலில் 113 இற்கும் அதிகமான ஆசனங்களை எங்களால் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றையதினம் (11) தேசிய மக்கள் சக்திக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள்

பிரதமர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியை பொதுத் தேர்தலில் மீண்டும் உறுதிப்படுத்துவோம். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வேலைத்திட்டங்களை பலமாக கொண்டு செல்வதற்கான பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்வோம்.

அதிகளவிலான பெண் பிரதிநிதித்துவத்தை பெற்று சாதனைப் படைப்போம்: பிரதமர் ஹரிணி | Let S Make History In Parliament Pm Harini

மக்களுக்கு இதுவரையில் நாங்கள் பொய் வாக்குறுதிகளை வழங்கியதில்லை. சகலருடனும் ஒன்றிணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் ஊழல்வாதிகளுடன் எங்களுக்கு எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை.

வன்னியில் வேட்புமனுத் தாக்கல் செய்த காதர் மஸ்தான்

வன்னியில் வேட்புமனுத் தாக்கல் செய்த காதர் மஸ்தான்

அதிகமான ஆசனங்கள்

நாட்டு மக்களை ஏமாற்றியவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.ஆனால் நாட்டை கட்டியெழுப்ப நேர்மையாக செயற்படுபவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம். 113 இற்கும் அதிகமான ஆசனங்களை இம்முறை எங்களால் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.

அதிகளவிலான பெண் பிரதிநிதித்துவத்தை பெற்று சாதனைப் படைப்போம்: பிரதமர் ஹரிணி | Let S Make History In Parliament Pm Harini

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் எந்த தடங்களும் ஏற்படாது. எங்களின் நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்தி வெற்றிகரமாக இந்த பேச்சுவார்த்தையை நிறைவு செய்வோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் புகைப்படங்களை காட்சிப்படுத்த முன் அனுமதி தேவை

ஜனாதிபதியின் புகைப்படங்களை காட்சிப்படுத்த முன் அனுமதி தேவை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW