போதை பாவனையை இல்லாமல் செய்வோம்: மட்டு சிகை அலங்கார தொழிலாளர்கள்

Batticaloa Sri Lanka Economy of Sri Lanka
By Fathima Sep 17, 2023 10:11 AM GMT
Fathima

Fathima

மட்டக்களப்பில் சிகை அலங்கார தொழிலாளர்கள் 'போதை பாவனையை இல்லாமல் செய்வோம்' எனும் தொனிப் பொருளில் தாங்கள் செயற்படவுள்ளதாக வரையறையுள்ள கல்குடா தொகுதி சிகை அலங்கார தொழிலாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

கல்குடா தொகுதி சிகை அலங்கார தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.எம்.இர்பான் தலைமையில் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டத்தின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

போதைப்பொருள் பாவனை

இன்று நாட்டில் பொருளாதார பிரச்சினையை விட போதைப்பாவனை இளைஞர்கள் மத்தியில் மிகவும் மோசமாக பரவி வருகின்றது.

போதை பாவனையை இல்லாமல் செய்வோம்: மட்டு சிகை அலங்கார தொழிலாளர்கள் | Let S Make Hairdressing Workers Drug Free

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தங்களிடம் சிகை அலங்காரத்திற்கு வரும் இளைஞர்களை சீர் திருத்த முயற்சிக்கும் வகையில் சிகை அலங்கார அமைப்பின் உறுப்பினர்கள் ஒன்றினைந்து தீர்மானித்துள்ளனர்.

இக் கூட்டத்தில் வாழைச்சேனை விஷேட அதிரடிப்படை முகாமை சேர்ந்த அதிகாரிகளான ஆர்.எம்.ரத்னாயக்க, எச்.எம்.ஐ.ஹேரத், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.ஷிஹான், ஓட்டமாவடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி ஏ.எல்.எம்.முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


GalleryGallery