பெண்களின் உரிமைகள் தொடர்பில் சட்ட அறிவு அவசியம்

Ampara Eastern Province Women
By Rukshy Sep 04, 2024 06:37 AM GMT
Rukshy

Rukshy

பெண்ணின் உரிமை சமூகத்தில் பேசுபொருளாகின்றது என்பதால் சட்டம் பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பபாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் தமிழ், முஸ்லிம் யுவதிகளுக்கான பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வு நேற்று (03) அம்பாறை மாவட்டம் மருதமுனையிலுள்ள முன்னணியின் அலுவலகத்தில்  நடைபெற்ற நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுடன் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுடன் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது

சட்ட ஏற்பாடுகள்

மேலும் தெரிவிக்கையில், ”உலக சனத்தொகை புள்ளிவிபரங்களின்படி, பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லாவிதங்களிலும் ஆண்களைப் போலவே அறிவாற்றல் மிக்கவர்களாக, சிறந்த நிருவாகிகளாக, ஆராய்ச்சியாளர்களாக, அரசியல்வாதிகளாக பெண்கள் இன்று தங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.

பெண்களின் உரிமைகள் தொடர்பில் சட்ட அறிவு அவசியம் | Legal Knowledge About Women S Rights Is Essential

இன்றைய பொருளாதார நெருக்கடி காலத்தில் மணமுடித்த கணவன் அநாதரவாய் மனைவியையும், பிள்ளைகளையும் விட்டுச் சென்றுள்ளதால் பிள்ளைகளைப் பராமரிக்க முடியாமல் வாழ்க்கைச் சுமைகளை சுமந்து கண்ணீர் விட்டழுகின்ற பெண்களின் நிலை பற்றியும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்திலும் பெண்களைப் பற்றிய மனப்பாங்குகள் சட்ட ஏற்பாடுகளில் செல்வாக்கு செலுத்துவதைக் காணலாம். 

இச்சட்டத்தின்படி, ஒரு பெண் பருவமடைந்ததும் திருமணம் செய்ய முடியும். ஆனால் 12 வயதுக்குக் குறைவாக இருப்பின் காழி நீதிபதியின் அனுமதி பெறப்பட வேண்டும்.

இச்சட்டமானது ஆண்களுக்கான திருமண வயது, இணக்கத்துக்கான தேவை பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. பெண்களின் விடயத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றது. இருப்பினும் பொதுச் சட்டத்தின்படி பதினெட்டு வயதினை தாண்டியவர்களே திருமணம் முடிப்பதற்கான சட்ட அங்கீகாரம் உள்ளது. 

குடும்ப வன்முறை 

திருமணத்தின் போதான பிரச்சினைகளுக்கு குடும்ப மட்டத்தில் கலந்துரையாடி சரிசெய்யப்படவேண்டும். அதுவும் கைகூடாத இறுதிநிலையாகவே விவாகரத்து இருக்கின்றது.

பெண்களின் உரிமைகள் தொடர்பில் சட்ட அறிவு அவசியம் | Legal Knowledge About Women S Rights Is Essential

தற்போதைய காலகட்டத்தில் இளம் யுவதிகள் கையடக்கத் தொலைபேசிகளை தவறாக பயன்படுத்துவதினால் குடும்ப ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

குடும்ப வன்முறை தடுத்தல் சட்டத்தின் மூலம் தீர்வுகள் தெளிவாக இருந்துள்ள போதிலும் அதிகமானவர்கள் அச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க விரும்புவதில்லை.

திருமண விடயத்திலும், விவாகரத்து விடயத்திலும். பராமரிப்பு விடயத்திலும் பொதுச் சட்டமும், முஸ்லிம் சட்டமும் எத்தகைய விடயப் பரப்புக்களைக் கொண்டுள்ளது என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். இதற்காக இளம் யுவதிகள் சட்டம் பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும்“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

சில அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் நடவடிக்கை: தேர்தல்கள் ஆணைக்குழு

சில அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் நடவடிக்கை: தேர்தல்கள் ஆணைக்குழு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery